காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா உடல்நிலையில் முன்னேற்றம்
|ராஜூ ஸ்ரீவஸ்தவா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
புதுடெல்லி,
இந்தி திரையுலகில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் ராஜூ ஸ்ரீவஸ்தவா (வயது 59). இவர் கடந்த 10 ஆம் தேதிடெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென சரிந்து விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் ராஜு ஸ்ரீவஸ்தவாவின் உடல்நிலையில் நேற்றை விட இன்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.
ராஜு ஸ்ரீவஸ்தவாவின் உடல்நிலை குறித்து அவரது சகோதரர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் ,"அவர் சில நபர்களை சந்திக்க டெல்லியில் தங்கியிருந்தார். அப்போது ஜிம்மிற்குச் செல்லும் போது ராஜு ஸ்ரீவஸ்தவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என தெரிவித்தார்.