< Back
தேசிய செய்திகள்
சிக்கமகளூருவில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்
தேசிய செய்திகள்

சிக்கமகளூருவில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்

தினத்தந்தி
|
3 July 2022 9:03 PM IST

சிக்கமகளூருவில் இலவச பஸ் பாஸ் வழங்க கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு டவுன் வீட்டுவசதி குடியிருப்பு பகுதியில் அரசு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி முன்பு உள்ள சிக்கமகளூரு-கடூர் சாலையை மறித்து ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர், என்.எஸ்.யு.ஐ. மாணவ அமைப்பினர் சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின்போது அவர்கள் கூறுகையில், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு இலவச பஸ் பாஸ் வழங்கவில்லை. இதனால் மாணவ-மாணவிகளுக்கு உடனடியாக இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று கூறினர்.

இதுபற்றி அறிந்ததும் சிக்கமகளூரு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவ-மாணவிகள் போராட்டத்ைத கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்