< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கர்நாடகா: பல்கலைக்கழகத்தில் மாணவிக்காக எகிறி எகிறி அடித்து கொண்ட மாணவர்கள்...!
|8 Aug 2022 2:33 PM IST
கலபுர்கியில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கலபுர்கி பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் இளம் பெண் காதல் விவகாரத்தில் மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து கல்லூரி மாணவர்களிம் விசாரணை நடத்தினர்.
அப்போது, பல்கலைக்கழகத்தில் படிக்கும் டெல்லியை சேர்ந்த மாணவியிடம் உள்ளூர் மாணவர்கள் சிலர் வம்பு இழுத்ததாகவும், இதனை அறிந்த ஆத்திரம் அடைந்த மாணவியின் நண்பர்கள் மோதலில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.