< Back
தேசிய செய்திகள்
தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை
தேசிய செய்திகள்

தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை

தினத்தந்தி
|
26 Sept 2023 12:15 AM IST

புத்தூர் அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா பன்னூர் அருகே கருமலை பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர். இவரது மகள் கீர்த்திகா(வயது 19).

இவர் புத்தூர் டவுனில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கீர்த்திகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை.

இதுபற்றி புத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்