< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கல்லூரி மாணவி, உறவினர் தூக்குப்போட்டு தற்கொலை
|25 Oct 2022 2:17 AM IST
கல்லூரி மாணவி, உறவினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு: பெங்களூரு கெங்கேரி அருகே வசித்து வந்தவர் அஸ்வத்(வயது 44). இவரது வீடடின் அருகே மதுரா(24) என்ற பி.எட். மாணவியும் வசித்து வந்தார். அஸ்வத்தும், மதுராவும் உறவினர்கள் ஆவார்கள். இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் அஸ்வத்துக்கும், மதுராவுக்கும் தகாத உறவு இருப்பதாக அஸ்வத்தின் மனைவி லட்சுமியும், அவரது சகோதரரான சிக்கண்ணய்யாவும் நினைத்து உள்ளனர். இ
ந்த நிலையில் அஸ்வத்துடன் பேசுவதை நிறுத்த வேண்டும் என்று மதுராவை சிக்கண்ணய்யா எச்சரித்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த மதுரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரா தற்கொலை செய்தது பற்றி அறிந்ததும் அஸ்வத்தும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இந்த சம்பவங்கள் குறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.