மைசூருவில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
|மைசூருவில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். காரணம் என்ன என்பது குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மைசூரு
மைசூரு நகர் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதாலட்சுமி (வயது 23). இவர் தட்சிண கன்னடா மாவட்டம் உஜ்ரே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கி படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக கல்லூரிக்கு செல்லாமல் சுதாலட்சுமி வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் யாரிடமும் சரியாக பேசாமல் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுதாலட்சுமி திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கே.ஆர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், சுதாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக சுதாலட்சுமி எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கி உள்ளது.
அதில், எனது சாவுக்கு யாரும் காரணமில்லை என எழுதப்பட்டிருந்தது. அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.