< Back
தேசிய செய்திகள்
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
7 Nov 2022 4:46 AM IST

பெலகாவியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெங்களூரு:

பெங்களூரு உளிமாவு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் அஸ்விதா (வயது 23). இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இதற்காக அவர் தனது தோழியுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். அப்போது அவருக்கும், அவரது தோழிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் தனித்தனியே வசித்து வந்தனர்.

இந்த நிலையில் அஸ்விதா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து உளிமாவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்