< Back
தேசிய செய்திகள்
ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி சாவு
தேசிய செய்திகள்

ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி சாவு

தினத்தந்தி
|
3 May 2024 3:59 AM IST

தண்டவாளத்தில் நின்று செல்போனில் வீடியோ எடுத்தபோது வேகமாக வந்த ரெயில் மாணவி மீது மோதியது.

ஹரித்வார்,

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஹரிபூர் டோங்கியா புக்காவாலா பகுதியை சேர்ந்த இளம்பெண் வைஷாலி. 20 வயதான வைஷாலி ஹரித்வாரின் ரூர்க்கி பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் வைஷாலி தனது தோழியுடன் கல்லூரிக்கு அருகில் உள்ள ரெயில்வே கேட் பகுதிக்கு சென்றார்.

அங்கு அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதற்காக தண்டவாளத்தில் நின்று செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த ரெயில் வைஷாலி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்