< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
|22 Dec 2022 12:15 AM IST
உப்பள்ளியில் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உப்பள்ளி:-
தார்வார் மாவட்டம் உப்பள்ளியை சேர்ந்தவர் ஆதித்யா சங்கண்ணா(வயது 18). இவர் பெங்களூரு பகலகுண்டே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். மேலும் வெளிநாட்டிற்கு சென்று படிப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதித்யா ஒரு தேர்வு எழுதி இருந்தார். ஆனால் அந்த தேர்வில் அவர் தோல்வி அடைந்து விட்டார். இதனால் அவர் வெளிநாட்டிற்கு சென்று படிக்க முடியாத நிலை உண்டானது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ஆதித்யா நேற்று முன்தினம் தான் தங்கி இருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பகலகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.