< Back
தேசிய செய்திகள்
சபரிமலையில் நாணயங்கள் மூலம் ரூ.11.65 கோடி காணிக்கை வசூல் - தேவசம்போர்டு தகவல்
தேசிய செய்திகள்

சபரிமலையில் நாணயங்கள் மூலம் ரூ.11.65 கோடி காணிக்கை வசூல் - தேவசம்போர்டு தகவல்

தினத்தந்தி
|
22 Feb 2024 7:56 PM IST

நாணயங்கள் மூலம் 11 கோடியே 65 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைக்கப்பெற்றதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்திய நாணயங்களை எண்ணும் பணி கடந்த 5-ந்தேதி தொடங்கியது. சுமார் 400 ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இதன்படி நாணயங்கள் மூலம் மொத்தம் 11 கோடியே 65 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைக்கப்பெற்றதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

மேலும் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை உட்பட பல்வேறு நாடுகளின் நாணயங்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாகவும், அவற்றை எண்ணும் பணி விரைவில் நடைபெற உள்ளதாகவும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.



மேலும் செய்திகள்