< Back
தேசிய செய்திகள்
ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி குறித்து விவாதிக்கவில்லை; எடியூரப்பா பேட்டி
தேசிய செய்திகள்

ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி குறித்து விவாதிக்கவில்லை; எடியூரப்பா பேட்டி

தினத்தந்தி
|
15 Sept 2023 3:29 AM IST

ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி குறித்து விவாதிக்கவில்லை என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு:

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான எடியூரப்பா நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அங்கு நடைபெற்ற பா.ஜனதா தோ்தல் குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் நேற்று பெங்களூரு திரும்பினார். பெங்களூருவில் எடியூரப்பா நிருபா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதாவின் தேர்தல் குழு கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதில் பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி குறித்து பேசவில்லை. எங்கள் கட்சியின் தேசிய தலைவர்களும் இதுபற்றி எதுவும் கேட்கவில்லை. பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் மனதில் என்ன இருக்கிறதோ எனக்கு தெரியாது. எதுவாக இருந்தாலும் கட்சி மேலிட தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

டெல்லி பயணத்தின்போது, பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி குறித்து எடியூரப்பா விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்