< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
வடமேற்கு மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
|5 Jan 2023 12:04 AM IST
வடமேற்கு மாநிலங்களில் மூடுபனி ஏற்படும் என்றும், இதனால் கடுமையான குளிர் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
வடமாநிலங்களில் தற்போது குளிர் காரணமாக அதிக அளவில் பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் நாட்டின் வடமேற்கு மாநிலங்களில் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு அடர்த்தியான பனிமூட்டம் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம், காஷ்மீர், லடாக் ஆகிய வடமேற்கு மாநிலங்களில் மூடுபனி ஏற்படும் என்றும், இதனால் கடுமையான குளிர் நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடும் குளிர் அலை வீசும் என்பதால் மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.