< Back
தேசிய செய்திகள்
நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தன - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தன - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தினத்தந்தி
|
6 Jun 2024 8:21 PM IST

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன.

புதுடெல்லி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. பிரதமர் மோடி 3-வது முறையாக வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றார்.

நரேந்திர மோடி தலைமையில் புதிய ஆட்சி அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கி உள்ளன. வருகிற 9-ம் தேதி மாலை 6 மணிக்கு 3-வது முறை பிரதமராக மோடி பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க வங்கதேசம், இலங்கை, பூடான், நேபாளம், மொரிஷியஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மார்ச் 16-ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் திரும்பப் பெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


மேலும் செய்திகள்