< Back
தேசிய செய்திகள்
மும்பை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
தேசிய செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

தினத்தந்தி
|
20 Aug 2022 6:26 PM IST

மும்பை விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவரிடமிருந்து ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை சுங்கத்துறை பறிமுதல் செய்தது.

மும்பை,

எத்தியோப்பியாவில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணி ஒருவரிடமிருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள 500 கிராம் கோகோயின் போதைப்பொருளை சுங்கத் துறையினர் மீட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தப் பெண் அடிஸ் அபாபாவிலிருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று மும்பைக்கு வந்ததாக சுங்கத் துறை டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுங்கத்துறை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நேற்று மும்பை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள 500 கிராம் கோகைனை சுங்கத்துறை கைப்பற்றியது மற்றும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அடிஸ் அபாபாவிலிருந்து வந்த சியரா லியோனியன் என்ற பெண்ணைக் கைது செய்தது.

அந்த பெண்ணின் பர்ஸில் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது" என்று கூறியுள்ளது.

மேலும் செய்திகள்