< Back
தேசிய செய்திகள்
கூட்டணியால் இழப்புகளே அதிகம்: நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி - மாயாவதி அறிவிப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

கூட்டணியால் இழப்புகளே அதிகம்: நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி - மாயாவதி அறிவிப்பு

தினத்தந்தி
|
24 Aug 2023 6:23 AM IST

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி நேற்று கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

லக்னோ,

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி நேற்று கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்த தனது கருத்தை அறிவித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

"வரும் நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி உத்தரபிரதேசத்தில் எந்த கூட்டணியுடனும் சேராமல் தனித்து எதிர்கொள்ளும். கூட்டணியால் பகுஜன் சமாஜ் பெற்ற பலன்களைவிட இழப்புகளே அதிகம். கூட்டணியால் வாக்குகள் கூட்டணிக்கு செல்லலாம், ஆனால் மற்ற கட்சிகளுக்கு தங்களது வாக்குகளை எங்கள் வேட்பாளருக்கு மாற்றுவதற்கான சரியான எண்ணமோ, திறனோ இல்லை. இது கட்சி தொண்டர்களின் மனஉறுதியை பாதிக்கிறது என்பதால் இந்த கசப்பான உண்மையை மனதில் கொண்டுதான் ஆக வேண்டும். எனவே நாங்கள் தனியாகவே நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம்" என்றார்.

பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பற்றி கருத்து தெரிவித்த அவர், "பகுஜன் சமாஜ் நலனுக்காக இரு அணிகளும் சிறிதும் செய்யவில்லை, குறுகிய அரசியலில் ஈடுபடுவதன் மூலம் சமூகத்தை உடைப்பதிலும், பலவீனப்படுத்துவதிலும் அவர்கள் மும்முரமாக உள்ளனர். எனவே அவர்களுடன் இடைவெளியைக் கடைப்பிடிப்பது நல்லது" என்றார்.

மேலும் செய்திகள்