சென்னை-சிவமொக்கா ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
|சென்னை - சிவமொக்கா ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
* சிவமொக்கா டவுன்-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-சிவமொக்கா டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் (வண்டி எண்: 06223/24) இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள் 2-ம், படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2-ம் கூடுதலாக இணைக்கப்படுகிறது.
* எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-கே.எஸ்.ஆர். பெங்களூரு-எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் (07339/40) இன்று முதல் 4 படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.
* புதுச்சேரி-யஸ்வந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (16574) வருகிற 22-ந்தேதி முதல் ஆத்தூர் ரெயில் நிலையத்தில் தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும்.
* தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (16235) வருகிற 19-ந்தேதி முதல் கொடுமுடி ரெயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும்.
* மைசூரு-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16232) வருகிற 18-ந்தேதி முதல் குளித்தலை ரெயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும்.
மண்டியா பகுதியில் ரெயில்வே மேம்பால பணிகள் நடந்து வருவதால் மைசூரு- பெங்களூரு விசுவேஸ்வரய்யா முனையம் எக்ஸ்பிரஸ் ரெயில் (06269) வருகிற 22-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.