< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இமாசலபிரதேசத்தில் மீண்டும் மேக வெடிப்பு: வீடுகள், சாலைகள் சேதம்
|27 July 2023 3:02 AM IST
இமாசலபிரதேசத்தில் மீண்டும் மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை காரணமாக வீடுகள், சாலைகள் சேதமடைந்தன.
சிம்லா,
வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இமாசலபிரதேச மாநிலத்தில் அடிக்கடி மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டி வருகிறது.
நேற்று முன்தினம் அங்குள்ள குல்லு மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு கொட்டிய கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு வீடுகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டன.
இந்த நிலையில் நேற்று தலைநகர் சிம்லாவில் உள்ள கந்தர் என்ற கிராமத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு இடைவிடாது கனமழை கொட்டியது. இதனால் அந்த ஒட்டுமொத்த கிராமமும் வெள்ளக்காடானது.
இதில் பள்ளிக்கூடம், வீடுகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. ஆடுகள், மாடுகள் உள்பட ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கனமழை, வெள்ளத்தை தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பல முக்கிய சாலைகள் சேதமடைந்தன.