< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
புதுச்சேரியில் 22ஆம் தேதி மதுக்கடைகள் அடைப்பு
|19 Sept 2023 2:56 PM IST
செப்டம்பர் 22-ந்தேதி விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பகுதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்படுகின்றன.
புதுச்சேரி,
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, புதுச்சேரியில் பல பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் வருகிற 22-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், செப்டம்பர் 22-ந்தேதி ஊர்வலம் செல்லும் பகுதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்படுகின்றன. காலை 8 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை நேரு வீதி, காமராஜர் சாலை உள்ளிட்ட வழிகளில் மதுக்கடைகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.