< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சீனாவுக்கு பிரதமர் அளித்த நற்சான்று, ஒருமைப்பாட்டை காவு வாங்கியது: மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்
|26 Jan 2023 2:42 AM IST
சீனாவுக்கு பிரதமர் அளித்த நற்சான்று, ஒருமைப்பாட்டை காவு வாங்கி உள்ளதாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்திய பகுதியை சீன ராணுவம் ஆக்கிரமிக்கவில்லை என்றும், கட்டுமான பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும் மோடி அரசு மறுத்து வருகிறது. இதனால், நமது எல்லைப்பகுதி ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. சீனாவுக்கு பிரதமர் மோடி கொடுத்த நற்சான்று, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை காவு வாங்கி விட்டது. இந்த பிரச்சினையில் நாட்டுக்கும், நாடாளுமன்றத்துக்கும் பிரதமர் மோடி நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.