< Back
தேசிய செய்திகள்
ஆண் குழந்தை பெற்றெடுத்த 9-ம் வகுப்பு மாணவி: பலாத்காரம் செய்தது யார்? - போலீஸ் விசாரணை
தேசிய செய்திகள்

ஆண் குழந்தை பெற்றெடுத்த 9-ம் வகுப்பு மாணவி: பலாத்காரம் செய்தது யார்? - போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
11 Jan 2024 8:21 AM IST

9-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்தது யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

துமகூரு,

கர்நாடக மாநிலம் துமகூரு டவுன் பகுதியில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் 9-ம் வகுப்பில் ஒரு சிறுமி படித்து வருகிறாள். அந்த சிறுமி அருகில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தாள். இந்த நிலையில் சிறுமியின் உடல்நிலை திடீரென மோசமானது. இதையடுத்து சிறுமி சிக்பள்ளாப்பூரில் உள்ள பாகேபள்ளி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள்.

அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பதும், அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் தெரிந்தது. இதையடுத்து அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து பாகேபள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி பதில் கூறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கை துமகூரு டவுன் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர். அதன்பேரில் துமகூரு போலீசார் சிறுமியை பலாத்காரம் செய்தது யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்