மத்திய பிரதேசத்தில் பள்ளியில் வைத்து சிறுமி பாலியல் பலாத்காரம் - காவலாளி கைது
|பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி சம்பவத்தன்று மதிய உணவு இடைவெளியில் கழிவறைக்கு சென்றாள்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே கோபிஷா என்ற இடத்தில் உள்ள பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி சம்பவத்தன்று மதிய உணவு இடைவெளியில் கழிவறைக்கு சென்றாள். அப்போது பின் தொடர்ந்து சென்ற பள்ளி காவலாளி லட்சுமி நாராயணன் திடீரென அவள் கண்ணையும், வாயையும் பொத்தி கழிவறைக்கு தூக்கி சென்றார். பின்னர் அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பற்றி அந்த மாணவி தனது ஆசிரியையிடம் கண்ணீர் மல்க கூறினாள். தன்னை மஞ்சள் சட்டை அணிந்த ஒருவர் தான் சீரழித்தாக தெரிவித்தாள். இதுதொடர்பாக போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து பள்ளியில் சம்பவம் நடந்த அன்று மஞ்சள் சட்டை அணிந்தவர் குறித்து விசாரித்தனர். அப்போது பள்ளி காவலாளி லட்சுமி நாராயணன் அந்த நிற சட்டை அணிந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.