3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 1-ம் வகுப்பு மாணவன்
|உத்தர பிரதேசத்தில் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 1-ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்து உள்ளனர்.
முசாபர்நகர்,
உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் 3 வயது சிறுமி சிறுவர்களுக்கான வகுப்பில் படித்து வந்து உள்ளார். சிறுமியிடம் நட்பு முறையில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவன் பழகி உள்ளான்.
இதன்பின் சிறுமியை பள்ளியின் மேல் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதுபற்றி சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளது.
இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசிடம் புகார் அளித்து உள்ளனர். அவர்கள் சிறுவனை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
கடந்த ஆண்டும் மத்திய பிரதேசத்தில் இதேபோன்றொரு சம்பவம் நடந்தது. இதில், 3 வயது சிறுமி உணவு வாங்க கடைக்கு செல்ல முயற்சித்தபோது, 12 வயது சிறுவன் சிறுமியை மறித்து நின்று உள்ளான்.
அதன்பின் சிறுமிக்கு சாக்லேட்டுகளை கொடுத்து உள்ளான். அடிக்கடி இதுபோன்று இனிப்புகளை கொடுத்து, சிறுமியை தன்னை பார்க்க வரும்படி செய்து உள்ளான். சிறுமியும் சாக்லேட்டுக்கு ஆசைப்பட்டு சிறுவனை தேடி சென்று உள்ளது. இதன்பின் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.