< Back
தேசிய செய்திகள்
இருபிரிவினரிடையே ஏற்பட்ட தகராறு: வல்லபாய் படேல் சிலை உடைப்பு - மோதல் வெடித்தது
தேசிய செய்திகள்

இருபிரிவினரிடையே ஏற்பட்ட தகராறு: வல்லபாய் படேல் சிலை உடைப்பு - மோதல் வெடித்தது

தினத்தந்தி
|
26 Jan 2024 1:01 AM IST

இரவோடு இரவாக வல்லபாய் படேலின் உருவச்சிலையை மர்மநபர்கள் டிராக்டர் மூலம் இடித்து தள்ளினர்.

போபால்,

மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் அருகே மக்டோன் நகர் பஸ் நிலையம் அருகே சர்தார் வல்லபாய் படேல் உருவச்சிலை நிறுவப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த மர்மநபர்கள், இரவோடு இரவாக வல்லபாய் படேலின் உருவச்சிலையை டிராக்டர் மூலம் இடித்து தள்ளினர். இதனை அறிந்த மற்றொரு பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தகராறு முற்றியதில் இருபிரிவினரை சேர்ந்தவர்கள் கற்களை எறிந்து கொண்டும் கையில் கிடைத்தவற்றை வைத்து சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்தனர்.

இதன்காரணமாக அந்தப்பகுதி போர்க்களமானது. சம்பவ இடத்தில் தற்போது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்