பெண்ணின் உள்ளாடையை திருடிய விவகாரத்தில் இரு பிரிவினரிடயே பயங்கர கலவரம் 10 பேர் காயம் 20 பேர் கைது
|பக்கத்து வீட்டைச் சேர்ந்த 31 வயது வாலிபர் உள்ளாடையை திருடிச்சென்று உள்ளது தெரியவந்து உள்ளது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் தண்டூகா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் உள்ளாடைகள் திருடப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒரே சாதியைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே கலவரம் உருவானது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஜூன் 27 அன்று பச்சம் கிராமத்தில் 30 வயதான பெண் ஒருவர் தனது 31 வயதான பக்கத்து வீட்டுக்காரர் தனது உள்ளாடைகளை எட்டு மாதங்களாக திருடியதாக குற்றம் சாட்டி உள்ளார்.
தினமும் புது புது உள்ளாடைகளை அவர் சலவை செய்து காய வைத்து உள்ளார் அது மாயமாகி உள்ளது.இதனால் விரக்தியடைந்த அவர், பதுங்கியிருந்து திருடனை கையும் களவுமாக பிடிக்க திட்டம் திட்டினார். இதனால் அந்த பகுதியில் ரகசியமாக செல்போனை வைத்து வீடியோ எடுத்து உள்ளார். அப்போது தான் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 31 வயது வாலிபர் உள்ளாடையை திருடிச்சென்று உள்ளது தெரியவந்து உள்ளது.
இதனால் அந்த பெண் அந்த நபரிடம் சண்டை போட்டு உள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அந்த பெண்ணை சில்மிஷம் செய்து பாலியல் ரீதியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
உதவிக்காக அந்த பெண் கூச்சலிட்டபோது அவரது குடும்ப உறுப்பினர்களை கம்பு மற்றும் ஆயுதங்களுடன் அங்கு வந்து அந்த நபரையும் அவரது உறவினர்களையும் தாக்கி உள்ளனர். அந்த நபரின் உறவினர்கள் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மீது பதிலடி கொடுக்கும் வகையில் எதிர் தாக்குதலை நடத்தினர்.
இதனால் அங்கு ஒரு கலவரமே உருவானது. இதனால் 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 20 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.