< Back
தேசிய செய்திகள்
தலைமை நீதிபதியாக 100 நாட்களை நிறைவு செய்த சந்திரசூட்: 14,209 வழக்குகளில் தீர்வு...!
தேசிய செய்திகள்

தலைமை நீதிபதியாக 100 நாட்களை நிறைவு செய்த சந்திரசூட்: 14,209 வழக்குகளில் தீர்வு...!

தினத்தந்தி
|
17 Feb 2023 8:50 PM IST

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்று 100 நாட்கள் நிறைவுபெற்றது. இந்த 100 நாட்களில் 14,209 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த லலித் ஓய்விற்கு பிறகு, 50வது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் 9ம் தேதி டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பேற்றார்.

இவரின் பதவிக்காலம் 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி வரை இருக்கிறது. டெல்லி பல்கலை.,யில் சட்டம் பயின்ற அவர், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை.,யில் முதுநிலை சட்டப்படிப்பை முடித்து, 1998ல் மும்பை ஐகோர்ட்டில் பணியாற்றினார். அதன் பின்னர் மும்பை கோர்ட்டு நீதிபதி, அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, 2016ல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என அடுத்தடுத்து உயர்ந்தார்.

கடந்த நவம்பரில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்று தற்போது 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த 100 நாட்களில் 14,209 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டார் சந்திரசூட்.

இதே காலகட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள மொத்த அலுவல்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தீர்ப்புகள் மொழிபெயர்ப்பு செய்து வெளியீடு என பல முன்னெடுப்புகளை அவர் மேற்கொண்டது சீரிய பணியாகும்.

மேலும் செய்திகள்