சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் சி.ஐ.டி. போலீஸ் விசாரணை சரியான பாதையில் செல்கிறது; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி
|சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் சி.ஐ.டி. போலீஸ் விசாரணை சரியான பாதையில் செல்கிறது என்று மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத் பால் உள்ளிட்ட முக்கிய போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டு இருப்பது கா்நாடகத்தில் தவிர மற்ற மாநிலங்களில் நடைபெற சாத்தியமில்லை.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடுவை கா்நாடக அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. அதனால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. இந்த வழக்கு குறித்து விசாரிக்கும் சி.ஐ.டி. போலீசாருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் அரசின் தலையீடு எதுவும் இல்லை. சி.ஐ.டி. போலீஸ் விசாரணை சரியான பாதையில் செல்கிறது.
இவ்வாறு மந்திரி அரக ஞானேந்திரா கூறினார்.