< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மெட்ரோ ரெயில் நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
|4 April 2024 2:00 PM IST
சி.ஐ.எஸ்.எப் வீரர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியின் நங்லோய் மெட்ரோ ரெயில் நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர் ஒருவர் தனது துப்பாக்கியை கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காலை 7 மணியளவில் நடந்துள்ளது.
உயிரிழந்த வீரர், சக்ரே கிஷோர் என்பதும், கடந்த 2014ம் ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எப்) சேர்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சி.ஐ.எஸ்.எப் வீரர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து துணை ராணுவப் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.