< Back
தேசிய செய்திகள்
சி.ஐ.எஸ்.எப். கட்டுப்பாட்டுக்குள் வந்த கொல்கத்தா ஆர்.ஜி.கார் மருத்துவமனை
தேசிய செய்திகள்

சி.ஐ.எஸ்.எப். கட்டுப்பாட்டுக்குள் வந்த கொல்கத்தா ஆர்.ஜி.கார் மருத்துவமனை

தினத்தந்தி
|
21 Aug 2024 2:52 PM IST

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவமனை சி.ஐ.எஸ்.எப். வீரர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சம்பவம் நடந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் மீண்டும் பணியை தொடங்கும் வகையில், மத்திய தொழில் பாதுகாப்புப் படை(சி.ஐ.எஸ்.எப்.) வீரர்கள் பாதுகாப்பு அளிக்க சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியிருந்தது. இதன்படி, ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனை தற்போது சி.ஐ.எஸ்.எப். வீரர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.


மேலும் செய்திகள்