< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் டிரக்கில் இருந்த ரூ.1.3 கோடி மதிப்பிலான சிகரெட்டுகள் கொள்ளை
|12 Oct 2022 1:49 AM IST
மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் டிரக்கில் இருந்த1.3 கோடி மதிப்பிலான சிகரெட்டுகளை காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று கொள்ளையடித்தது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் டிரக்கில் இருந்து ரூ.1.36 கோடி மதிப்புள்ள சிகரெட்டுகளை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
டிரக் சென்றுகொண்டிருந்த சாலையின் வழியாக காரில் வந்த அடையாளை தெரியாத 6 கொள்ளையர்கள், சக்வார் கிராமத்திற்கு அருகே டிரக்கை வழிமறித்தர். பின்னர், டிரைவரை அடித்து, கண்களை மூடிக்கொண்டு டிரக்கை ஓட்டிச் சென்றனர்.
சிகரெட்டை கொள்ளையடித்த பிறகு, டிரக்கை கைவிட்ட கொள்ளையர்கள், டிரக் ஓட்டுநரை சுங்கச்சாவடி அருகே விடுவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.