தேர்தல் பத்திர வழக்கு கடந்து வந்த பாதை
|தேர்தல் பத்திரம் திட்டம் சட்ட விரோதமானது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து இருக்கிறது.
புதுடெல்லி,
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க வகைசெய்யும் தேர்தல் பத்திரத் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. அது சட்டவிரோதமானது. எனவே தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று அதிரடியாக தீர்ப்பு கூறியது.
இந்த வழக்கு கடந்து வந்த பாதை வருமாறு:-
* 2017: தேர்தல் பத்திர திட்டம் நிதி மசோதாவில் அறிமுகம்.
* செப்.14, 2017: இதை எதிர்த்து 'ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.
* அக்.3, 2017: வழக்கு தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்.
* ஜன.2, 2018: தேர்தல் பத்திரம் திட்டம் குறித்த அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டது.
* நவ.7, 2022: சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் வருடத்தில் விற்பனை நாட்களை 70-ல் இருந்து 85 ஆக உயர்த்துவதற்காக தேர்தல் பத்திரத் திட்டம் திருத்தப்பட்டது.
* அக்.16, 2023: தேர்தல் பத்திரத் திட்டத்தை எதிர்க்கும் வழக்குகளை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு பரிந்துரைத்தது.
* அக்.31, 2023: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
* நவ.2, 2023: வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு நிறுத்தி வைப்பு.
* பிப்.15, 2024: தேர்தல் பத்திரத் திட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக்கூறி இந்த திட்டத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் ஒருமனதாக தீர்ப்பு அளித்தனர்.