< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
|25 Dec 2023 6:50 AM IST
கிறிஸ்துவின் போதனைகள் எப்போதும் பொருத்தமானவை என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உலகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "இந்த பண்டிகை மனித குலத்துக்கு தன்னலமற்ற சேவை செய்வதற்கு நம்மை ஊக்குவிக்கிறது. சமுதாயத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேண கிறிஸ்துவின் போதனைகள் எப்போதும் பொருத்தமானவை. கிறிஸ்துமசின் புனிதமான தருணத்தில், அனைத்து சக குடிமக்களுக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.