< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இலங்கை துறைமுகத்துக்கு வரும் சீன உளவு கப்பல் - சிங்கள அரசின் அனுமதியால் இந்தியா உஷார்
|1 Aug 2022 5:59 AM IST
இலங்கை துறைமுகத்தில் சீன உளவு கப்பல் ஒரு வாரம் நிற்கும் என்று அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது.
புதுடெல்லி,
இலங்கையின் தென்பகுதியில் உள்ள ஹம்பன்தொட்டா ஆழ்கடல் துறைமுகம், சீனாவிடம் கடன் பெற்று மேம்படுத்தப்பட்டது. அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால், அத்துறைமுகத்தை சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு அளித்துள்ளது.
இதற்கிடையே, சீனாவின் 'யுவான் வாங்-5' என்ற உளவு கப்பல், ஹம்பன்தொட்டா துறைமுகத்துக்கு வருவதாக தகவல் வெளியானது. இந்த தகவலை இலங்கை ராணுவம் நேற்று உறுதி செய்தது. சீன கப்பலின் இந்த வருகை, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
இதுபற்றி கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ''சீன கப்பல் வருவதை நாங்கள் அறிவோம். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலனில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த விளைவையும் உன்னிப்பாக கண்காணிப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.