< Back
தேசிய செய்திகள்
சீனா போருக்கு தயாராகி வருகிறது - ராகுல் காந்தி கருத்து
தேசிய செய்திகள்

"சீனா போருக்கு தயாராகி வருகிறது" - ராகுல் காந்தி கருத்து

தினத்தந்தி
|
16 Dec 2022 3:26 PM GMT

இந்திய அரசு உண்மையை ஏற்க மறுப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் 'இந்திய ஒற்றுமை யாத்திரை' இன்று 100-வது நாளை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் அழிக்க முடியாது என்றும் பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சி நிச்சயம் வீழ்த்தும் என்றும் தெரிவித்தார்.

லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதிகளில் சீன ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், சீனா போருக்கு தயாராகி வருகிறது என்றும் இந்திய அரசு இதனை ஏற்க மறுத்து உண்மையை மறைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்