சீன பாதுகாப்புத்துறை மந்திரி இந்த வாரம் இந்தியா வருகை...!
|சீன பாதுகாப்புத்துறை மந்திரி இந்த வாரம் இந்தியா வர உள்ளார்.
டெல்லி,
இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு வரும் 27 மற்றும் 28-ம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது.
தலைநகர் டெல்லியில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். அந்த வகையில் இந்த மாநாட்டில் பங்கேற்க சீன பாதுகாப்புத்துறை மந்திரி லி ஷங்கூப் இந்த வாரம் இந்தியா வர உள்ளார்.
2020 பிப்ரவரியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீன படைகள் மோதிக்கொண்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பின் சீன பாதுகாப்புத்துறை மந்திரி இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.
இந்தியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மந்திரி பங்கேற்பது குறித்து இதுவரை எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.