காஷ்மீரை வாட்டி எடுக்கும் குளிர் - ஸ்ரீநகரில் மைனஸ் 5.8 டிகிரி வெப்பநிலை பதிவு
|காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று இரவு வெப்பநிலை மைனஸ் 5.8 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.
ஸ்ரீநகர்,
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஒரு சில இடங்களில் தற்போது நிலவி வரும் பனிக்காலம் காரணமாக கடுமையான குளிர் வாட்டி எடுத்து வருகிறது. அத்தகைய இடங்களில் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு குடும்பத்தினரோடு எளிமையான முறையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் தற்போது கடுமையான பனிக்காலம் நிலவி வருகிறது. காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் உறைநிலைக்கு கீழ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இந்த ஆண்டு பதிவானதிலேயே மிகக் குறைந்த அளவு வெப்பநிலை காஷ்மீரில் தற்போது காணப்படுகிறது.
காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று இரவு வெப்பநிலை மைனஸ் 5.8 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. அதிக குளிர் காரணமாக தண்ணீர் குழாய்களில் நீர் உறைந்து காணப்படுகிறது. இதே போல் காஷ்மீரில் உள்ள பராமுல்லா, பால்கம், குப்வாரா உள்ளிட்ட பகுதிகளிலும் உறைநிலைக்கு கீழ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.