< Back
தேசிய செய்திகள்
கேதர்நாத் யாத்திரைக்கு சென்ற சிக்கமகளூரு வாலிபர் உடல் நலக்குறைவால் சாவு
தேசிய செய்திகள்

கேதர்நாத் யாத்திரைக்கு சென்ற சிக்கமகளூரு வாலிபர் உடல் நலக்குறைவால் சாவு

தினத்தந்தி
|
2 Aug 2023 12:15 AM IST

கேதர்நாத் யாத்திரைக்கு சென்ற சிக்கமகளூரு வாலிபர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

சிக்கமகளூரு:

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா சன்னாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கிரீஷ் (வயது 25). இவர் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் கிரீஷ் உள்பட 7 பேர் மூடிகெரேயில் இருந்து கேதர்நாத்திற்கு யாத்திரை சென்றார். இந்த நிலையில் கேதர்நாத்தில் அதிக குளிர் காரணமாக கிரீசுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் ரிஷிகேசில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கிரீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கேதார்நாத் போலீசார், கிரீசின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். கிரீசின் உடல் தற்போது ரிஷிகேசில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் உள்ளது. அவரது உடலை கொண்டுவர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிரீசின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்