< Back
தேசிய செய்திகள்
சிக்கமகளூருவை புகையிலை இல்லா மாவட்டமாக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் ரமேஷ் உத்தரவு
தேசிய செய்திகள்

சிக்கமகளூருவை புகையிலை இல்லா மாவட்டமாக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் ரமேஷ் உத்தரவு

தினத்தந்தி
|
22 Sept 2022 12:30 AM IST

சிக்கமகளூருவை புகையிலை இல்லா மாவட்டமாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் ரமேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கலெக்டர் ரமேஷ் பேசியதாவது:-

சிக்கமகளூரு மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் புகையிலை இல்லா அலுவலகமாக இருக்க வேண்டும். மாவட்டத்தில் மொத்தம் 2,016 பள்ளி, கல்லூரிகள் உள்ளன. இதில் 525 பள்ளி, கல்லூரி வளாகங்கள் தான் புகையிலை இல்லா பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற பகுதிகளில் புகையிலை புழக்கம் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்கமகளூருவை புகையிலை இல்லா மாவட்டமாக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளை சுற்றி 100 மீட்டருக்குள் புகையிலை பொருட்கள் விற்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் அவர்கள் மீது வழக்கும் தொடரலாம். அதிகாரிகள் அதிக அக்கறையுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்