< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சிக்கமகளூரு நகரசபை துணை தலைவி திடீர் ராஜினாமா
|23 July 2023 12:15 AM IST
சிக்கமகளூரு நகரசபை துணை தலைவி தனது பதவியை திடீர் ராஜினாமா செய்தார்.
சிக்கமகளூரு-
சிக்கமகளூரு நகரசபை தலைவராக இருந்து வந்தவர் வேணுகோபால். இவர் கடந்த வாரம் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும் தனது ராஜினாமா கடிதத்தையும் மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜிடம் கொடுத்தார். ஆனால் அவரது ராஜினாமா கடிதம் அங்கீகரிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று திடீரென வேணுகோபால் தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றார்.
இந்த நிலையில் சிக்கமகளூரு நகரசபை துணை தலைவியாக இருந்து வரும் உமாதேவி தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக திடீரென அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜிடம் வழங்கினார். உமாதேவியின் ராஜினாமா கடிதம் அங்கீகரிக்கப்படலாம் என்றும், அவருக்கு பதிலாக வேறொருவர் நியமிக்கப்பட இருப்பதாகவும் சில கவுன்சிலர்கள் கூறினர்.