சிக்கமகளூரு நகரசபை தலைவர் ராஜினாமா
|கட்சியின் வேண்டுகோைள ஏற்று சிக்கமகளூரு நகரசபை தலைவர் பதவியை வேணுகோபால் ராஜினாமா செய்தார். கடிதத்தை மாவட்ட கலெக்டரிடம் அவர் வழங்கினார்.
சிக்கமகளூரு-
கட்சியின் வேண்டுகோைள ஏற்று சிக்கமகளூரு நகரசபை தலைவர் பதவியை வேணுகோபால் ராஜினாமா செய்தார். கடிதத்தை மாவட்ட கலெக்டரிடம் அவர் வழங்கினார்.
நகரசபை தலைவர் பதவி
சிக்கமகளூரு நகரசபை தலைவராக இருந்து வந்தவர் வேணுகோபால். பா.ஜனதா கட்சியை சேர்ந்த இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும் தனது ராஜினாமா கடிதத்தை மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜிடம் கொடுத்தார். ஆனால் அப்போது வேணுகோபாலின் ராஜினாமா கடிதம் அங்கீகரிக்கப்படவில்லை.
பின்னர் தனது ராஜினாமா கடிதத்ைத அவர் கலெக்டரிடம் சென்று வாபஸ் பெறுவதாக கூறினார். இதையடுத்து வேணுகோபால் கடிதத்தை வாபஸ் பெற்றார். அப்போது சிக்கமகளூரு நகரசபை துணை தலைவராக இருந்த உமாதேவியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தையும் மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜிடம் கொடுத்தார். அவரின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சிக்கமகளூரு நகரசபை தலைவர் பதவியை வேணுகோபால் ராஜினாமா செய்தார்.
ராஜினாமா கடிதம்
அதற்கான கடிதத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் சென்று வேணுகோபால் மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜிடம் வழங்கினார். அதனை வாங்கிய கலெக்டர் கடிதத்தை அங்கீகரித்தார். இதுகுறித்து வேணுகோபால் கூறுகையில், சட்டசபை தேர்தலின்போது நகரசபை தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்தேன்.
அப்போது எனது ராஜினாமா கடிதம் ஏற்கவில்லை. இதனால் வாபஸ் பெற்றேன். இந்தநிலையில் தற்போது பா.ஜனதா கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க நகரசபை பதவியை ராஜினாமா செய்தேன், என்றார். இந்தநிலையில் வேணுகோபால் நகரசபை பதவியை ராஜினாமா செய்ததால் அந்த பதவி நகரசபை கவுன்சிலர் மதுகுமார் அரசுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.