< Back
தேசிய செய்திகள்
சிக்கமகளூரு மாவட்டத்தில், அரசு சார்பில் மதரசா பள்ளிகளில் வளர்ச்சி பணிகள் செய்யப்படும்; கலெக்டர் ரமேஷ் அறிவிப்பு
தேசிய செய்திகள்

சிக்கமகளூரு மாவட்டத்தில், அரசு சார்பில் மதரசா பள்ளிகளில் வளர்ச்சி பணிகள் செய்யப்படும்; கலெக்டர் ரமேஷ் அறிவிப்பு

தினத்தந்தி
|
25 Aug 2022 8:24 PM IST

சிக்கமகளூரு மாவட்டத்தில், அரசு சார்பில் மதரசா பள்ளிகளில் வளர்ச்சி பணிகள் செய்யப்படும் என்று கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு;


கலெக்டர் அறிக்கை

சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதில் கூறியிருப்பதாவது:-

சிக்கமகளூரு மாவட்டத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மதரசா மற்றும் மவுலானா பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அரசு முன்வந்துள்ளது.

இதற்காக மாநில அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அந்த வகையில் மதரசா, மவுலானா பள்ளிகளில் புதிய கட்டிடம், அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படும். மேலும் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு தேவையான உதவியும் வழங்கப்படும்.


விண்ணப்பிக்க வேண்டும்

இதனை கருத்தில் கொண்டு முஸ்லிம் சமுதாய தலைவர்கள், தங்கள் பகுதியில் உள்ள மதரசா மற்றும் மவுலானா பள்ளிகளில் வளர்ச்சி பணி மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வளர்ச்சி பணிகள் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.]

மேலும் செய்திகள்