< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வில் சர்வதேச கோர்ட்டு நீதிபதி
|13 Feb 2024 5:45 AM IST
சர்வதேச கோர்ட்டு நீதிபதி ஹிலாரியை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாக டி.ஒய்.சந்திரசூட் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
சர்வதேச கோர்ட்டு நீதிபதி ஹிலாரி கார்ல்ஸ்வொர்த், இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் அவருடன் அமர்ந்து கோர்ட்டு அலுவல்களை பார்த்தார்.
அவரை வரவேற்று தலைமை நீதிபதி கூறியதாவது:-
சர்வதேச கோர்ட்டு நீதிபதி ஹிலாரி கார்ல்ஸ்வொர்த்தை எங்களுடன் அமர வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒரு சிறந்த நீதிபதி.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பெண் நீதிபதி ஹிலாரியை அனைவரும் வரவேற்பதாக கூறினார்.
ஆஸ்திரேலிய வக்கீலான ஹிலாரி கார்ல்ஸ்வொர்த், கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 5-ந் தேதியில் இருந்து சர்வதேச கோர்ட்டு நீதிபதியாக இருந்து வருகிறார்.