< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் உள்ள வைஷ்ணவிதேவி கோவிலில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வழிபாடு
தேசிய செய்திகள்

காஷ்மீரில் உள்ள வைஷ்ணவிதேவி கோவிலில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வழிபாடு

தினத்தந்தி
|
30 Jun 2023 1:01 AM IST

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வைஷ்ணவிதேவி கோவிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்து வழிபட்டார்.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் புகழ்பெற்ற வைஷ்ணவிதேவி குகைக்கோவில் உள்ளது. கத்ரா பயணம் மேற்கொண்டுள்ள சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நேற்று இந்த கோவிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்து வழிபட்டார்.

கோவிலுக்கு வந்த அவரை, கோவில் மூத்த நிர்வாக அதிகாரி வரவேற்று அழைத்து சென்றார். நீதிபதியுடன், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியும் சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட தலைமை நீதிபதி அருகில் உள்ள பைரன் பாபா கோவிலிலும் வழிபாடு செய்தார்.

மேலும் செய்திகள்