< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சத்தீஸ்கரில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு
|9 Sept 2024 6:59 AM IST
மழைக்கு ஒதுங்கி மரத்தின் கீழ் நின்றவர்கள் மீது மின்னல் தாக்கியது,
ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோதரா கிராமத்தைச் சேர்ந்த சிலர் வயலில் வேலை செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது.
இதையடுத்து அவர்கள் மழையில் இருந்து தப்பிப்பதற்காக அருகில் இருந்த மரத்தின்கீழ் ஒதுங்கினர். அப்போது மழைக்கு ஒதுங்கி நின்ற அவர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில், 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்கள் முகேஷ் (20 வயது), தங்கர் (30 வயது), சந்தோஷ் (40 வயது), தானேஷ்வர் (18 வயது), பொக்ராஜ் விஷ்வகர்மா (38 வயது), தேவதாஸ் (22 வயது), விஜய் (23 வயது) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்த 3 பேர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.