< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சத்தீஷ்காரில் 8 நக்சலைட்டுகள் சரண்
|3 Jun 2024 3:19 AM IST
சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நக்சலைட்டுகள் 8 பேர் சரணடைந்தனர்.
சுக்மா,
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் அதிகளவில் நடமாடி வருவதால் அவர்களை ஒடுக்கும் பணியில் மாநில போலீசாருடன் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக நக்சலைட்டுகள் பலர் தங்களுடைய ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் போலீசாரால் வெகுமதி அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நக்சலைட்டுகள் 8 பேர் போலீசில் சரணடைந்தனர். மொத்தமாக அவர்களின் தலைகளுக்கு ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டு துப்பாக்கிகள், தோட்டா குவியல்கள், முக்கிய துப்புகள் ஆகியவற்றை ஒப்படைத்து அவர்கள் சரணடைந்தனர்.