சத்தீஸ்கர்: நக்சலைட்டுகளால் உருவாக்கப்பட்ட 70 மீட்டர் நீள சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு
|இந்த சுரங்கப்பாதை பிஜாப்பூர் மாவட்டத்தில் நேற்று நக்சல் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
ராய்ப்பூர்,
சத்தீஸ்கரில் பஸ்தார் பிரிவில் உள்ள தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் அடர்ந்த வனப்பகுதியில் நக்சலைட்கள் தோண்டிய 70 மீட்டர் நீள சுரங்கப்பாதையை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்,
இந்த சுரங்கப்பாதை பிஜாப்பூர் மாவட்டத்தில் நேற்று நக்சல் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் நக்சலைட்டுகள் இந்த சுரங்கப்பாதையை பாதுகாப்புப் பணியாளர்களிடம் இருந்து மறைந்துகொள்ளும் வகையிலும், நக்சல்கள் தொடர்பான பொருட்களைக் கொட்டுவதற்கும் இதைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார் . விசாரணைக்கு பிறகே முழு விவரம் தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிஜாப்பூர் மாவட்டத்தில் நேற்று நக்சல் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.