செஸ் உலகக் கோப்பை: இறுதிப்போட்டியில் பங்கேற்றுள்ள பிரக்ஞானந்தாவுக்கு ராகுல்காந்தி வாழ்த்து
|செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் பிரக்ஞானந்தாவுக்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
10-வது உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென் – இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர்.
மாக்னஸ் கார்ல்சென் கருப்பு நிற காய்களுடனும் , பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினர். இந்த நிலையில் இந்த போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த முதல் சுற்று டிராவில் முடிந்தது. ஆட்டத்தின் 35வது நகர்தலுக்கு பிறகு முதல் சுற்று டிராவில் முடிந்தது .நாளை 2வது சுற்று போட்டி நடைபெற உள்ளது. பிரக்ஞானந்தா 2வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாட உள்ளார்.
முன்னதாக செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் பிரக்ஞானந்தாவுக்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "FIDE செஸ் உலகக் கோப்பையின் இறுதி போட்டிக்கு முன்னேறியதற்கு பிரக்ஞானந்தாவுக்கு எனது வாழ்த்துகள். மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான இறுதி போட்டியில் நீங்கள் பட்டம் வெல்ல விரும்புகிறேன். ஒரு பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் உங்களுக்காக வாழ்த்துகிறார்கள்." என்று அதில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.