< Back
தேசிய செய்திகள்
செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை  நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி

தினத்தந்தி
|
25 Sept 2024 8:51 PM IST

பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணி வீரர், வீராங்கனைகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்தது. இதில்இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய அணியினரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணி வீரர், வீராங்கனைகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்