புதுச்சேரி-சென்னை இடையே வாரத்தில் 2 நாட்கள் சரக்கு கப்பல் போக்குவரத்து
|புதுச்சேரி-சென்னை இடையே வாரத்தில் 2 நாட்கள் சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி-சென்னை இடையே வாரத்தில் 2 நாட்கள் சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து சரக்கு போக்குவரத்தை தொடங்க சென்னை எண்ணூர் துறைமுகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சாகர்மாலா திட்டத்தின்கீழ் புதுச்சேரி புதிய துறைமுகத்தில் தூர்வாரும் பணிகள் நடந்தன. இதனால் சரக்கு போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்தது. இதனிடையே முகத்துவார பகுதியில் மணல் சேர்ந்துள்ளது. அவற்றை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த வாரம் சிறிய ரக சரக்கு கப்பலானது வெள்ளோட்டமாக புதுச்சேரி துறைமுகத்துக்கு சென்றது. அந்த கப்பல் புதிய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்த சரக்கு கப்பலானது சென்னைக்கு புறப்பட்டு வருகிறது. இங்கிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு 28-ந்தேதி புதுச்சேரி திரும்ப உள்ளது. தொடர்ந்து வாரத்தில் 2 நாட்கள் சென்னை-புதுச்சேரி இடையே சரக்கு கப்பலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.