< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ராஜஸ்தானில் தலித் மாணவிகள் பரிமாறிய உணவை தூக்கி எரியச் சொல்லி மிரட்டிய சமையல்காரர் கைது
|4 Sept 2022 2:53 AM IST
அனைத்து மாணவர்களும் உணவை தூக்கி எரிய வேண்டும் என்று மிரட்டிய நிலையில், மாணவர்கள் உணவை கீழே கொட்டியுள்ளனர்.
ஜெய்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பரோடி பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் இரண்டு தலித் மாணவிகள், மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறியுள்ளனர். இதை அறிந்த சமையல்காரர் லாலா ராம் குஜ்ரார், அந்த மாணவிகளிடம் உணவு வாங்கிய அனைத்து மாணவர்களும் உணவை தூக்கி எரிய வேண்டும் என்று மிரட்டிய நிலையில், மாணவர்கள் உணவை கீழே கொட்டியுள்ளனர்.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், சமையல்காரர் லாலா ராம் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு லாலா ராம் பள்ளியில் உயர்சாதி மாணவர்களை மட்டுமே உணவு பரிமாற வைப்பார் எனவும், அவர்கள் சரியாக பரிமாறாததால், ஆசிரியர் ஒருவர் தலித் மாணவிகளை உணவு பரிமாறச் சொன்னதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.