< Back
தேசிய செய்திகள்
8 வயது பெண் சிறுத்தை கூண்டில் சிக்கியது
தேசிய செய்திகள்

8 வயது பெண் சிறுத்தை கூண்டில் சிக்கியது

தினத்தந்தி
|
28 Dec 2022 3:15 AM IST

மைசூருவில், தொடர் அட்டகாசம் செய்து வந்த 8 வயது பெண் சிறுத்தை கூண்டில் சிக்கியது.

மைசூரு:

மைசூரு (மாவட்டம்) தாலுகா கீழனபுரா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்தில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கிராமத்தில் புகுந்து கன்றுக்குட்டியை சிறுத்தை வேட்டையாடி கொன்றது. இதனால் பீதியடைந்த மக்கள், அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அந்தப்பகுதியில் இரும்பு கூண்டு ஒன்றையும் வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய அந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த இரும்பு கூண்டுக்குள் வசமாக சிக்கிக் கொண்டது. இதுபற்றி அறிந்ததும் அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து வனத்துறையினர், இரும்பு கூண்டுடன் சிறுத்தையை லாரியில் ஏற்றி அங்கிருந்து சென்றனர். பிடிபட்டது 8 வயது நிரம்பிய பெண் சிறுத்தை ஆகும். தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை சிக்கியதால் அந்தப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்